செந்துறை அருகே பிரபல ரவுடி பழனிவேல் கைது
Subscribe to Oneindia Tamil
அரியலூர்: செந்துறை அருகே பிரபல ரவுடி பழனிவேலு-வை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, முல்லையூர் காலனி தெருவை சேர்ந்த கதிர்வேல் மகன் பழனிவேல்(33). பிரபல ரவுடி. பழனிவேலு மீது பல காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் ரவுடி, பழனிவேலுவை தளவாய் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், தளவாய் இந்தியா சிமெண்ட் தொழிற்சாலை அருகே பழனிவேல் இருப்பதாக தளவாய் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த போலீசார் ரவுடி பழனிவேலுவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதையடுத்து ரவுடி பழனிவேல் மீதான வழக்கை உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. இளங்கோவன் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications