தனித்து நின்று காமராஜர் ஆட்சியை அமைக்க வேண்டும் - ஜி.கே.வாசனின் விருப்பம்
வேலூர்: காங்கிரஸ் கட்சி தனித்து நின்று காமராஜர் ஆட்சியை அமைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் பேசினார்.
வேலூர் மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மேயர் வேட்பாளர் தேவி மற்றும் கவுன்சிலர் வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் இன்று வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், "கடந்த 1974 முதல் திராவிட கட்சிகள் நமது முதுகில் ஏறி சவாரி செய்து வந்தனர். ஆனால் அவர்கள் வெற்றி பெற்றனர். அத்தோடு இல்லாமல் காங்கிரஸ் இயகத்தின் நற்பெயரையும், புகழையும் கெடுத்துவிட்டனர். இனிமேல் அதுபோல் நடக்க கூடாது.
நாம் தனித்து நின்றுள்ளோம். இது நமக்கு ஆரம்பம் தான். அடுத்த வரும் தேர்தலில் நாம் தனித்து நின்று ஆட்சியை பிடிக்க வேண்டும். காமராஜர் ஆட்சியை அமைக்க வேண்டும். அதற்காக தொண்டர்கள் உழைக்க வேண்டும். இந்த முறை நீங்கள் எங்களது கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும்", என்றார்.












Click it and Unblock the Notifications