தி.மு.க. எம்.எல்.ஏ. கே.சி.பழனிசாமி உதவியாளர் சுந்தரேசன் கைது

Subscribe to Oneindia Tamil

கரூர்: மணல் விவகாரத்தில் அரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ. கே.சி.பழனிசாமியின் உதவியாளர் சுந்தரேசனையும், கிரிராஜன் என்பவரையும் கரூர் மாவட்ட போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் மாயனூர் காவிரியாற்றுப் பகுதியில் அரசு புறம் போக்கு நிலத்தில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக அரவக்குறிச்சி தி.மு.க. எம்.எல்.ஏ. கே.சி.பழனிசாமி, அவரது உதவியாளர் சுந்தரேசன், மேலாளர் கிரிராஜ், மற்றும் ரவிராஜா, ராஜா, சசிகுமார், குமார் ஆகிய 7 பேர் மீது மாயனூர் கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) நீலமேகம் கடந்த மாதம் 14ம் தேதி மாயனுர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்தனர்.

அதன்பேரில் தி.மு.க. அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. கே.சி.பழனிசாமியை கடந்த மாதம் 19ம் தேதி போலீசார் கைது செய்து, குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த மற்ற 6 பேரையும் தனிப்படை போலீசார் வலை வீசி தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை 5 மணிக்கு கிருஷ்ணராயபுரம் அருகே சித்தலவாய் ரயில் நிலையத்தில் இருந்த தி.மு.க. அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. கே.சி.பழனிசாமியின் உதவியாளர் சுந்தரேசனை, இன்ஸ்பெக்டர் சுப்பையா தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். அதேபோல, தி.மு.க. அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.கே.சி.பழனிசாமி-யின் மோலாளர் கிரிராஜை இன்று கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+