தேர்தலில் மதுபாட்டில்கள், அன்பளிப்பு பெறுபவர்களுக்கு குண்டாஸ்- கலெக்டர் எச்சரிக்கை
மதுரை: உள்ளாட்சித் தேர்தலின் போது மதுபாட்டில்கள், அன்பளிப்பு பெறுபவர்கள் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை அருகே உள்ள மேலூர் ஒன்றிய பகுதிகளான நாவினிப்பட்டி, கீழையூர், தனியாமங்கலம், வெள்ளலூர் ஆகிய இடங்களில் உள்ள வாக்குச் சாவடிகளை மாவட்ட கலெக்டர் சகாயம் பார்வையிட்டார். அப்போது அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துறையினரிடம் கேட்டறிந்தார்.
அந்த பகுதிகளில் வாக்களிப்பதற்காக விருந்து வைத்தாலோ, மது பாட்டில்களோ, வேறு வகையான அன்பளிப்புகளோ வழங்கினால் அவற்றை வழங்கியவர்கள் மற்றும் வாங்கியவர்கள் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்குமாறு வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
ஊமச்சிகுளத்தில் இருந்து கடச்சனேந்தல் செல்லும் வழியில் கொடியுடன் சென்ற வாகனம் ஒன்றையும், சர்வேயர் காலனியில் மொபைல்போனில் பேசியவாறு வாகனம் ஓட்டி சென்றவரையும் மாவட்ட கலெக்டர் நிறுத்தி நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டார். மாவட்ட கலெக்டர் சகாயத்தின் இந்த நடவடிக்கை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications