உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம்- நாளை ஈரோட்டில் தொடங்குகிறார் சரத்குமார்
ஈரோடு: அதிமுக கூட்டணியில் எஞ்சியுள்ள கட்சிகளில் ஒன்றான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், தனது உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தை நாளை ஈரோடச்டிஸல் தொடங்குகிறார்.
ஈரோடு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 11-ம் தேதி முதல் பிரசாரம் செய்கிறேன். ஈரோட்டில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வரும் 13-ம் தேதி பிரசாரம் செய்ய உள்ளேன்.
இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க, இந்திய கடல் எல்லையை மத்திய அரசு உடனடியாக வரையறை செய்ய வேண்டும். கடல் எல்லையில் இந்திய ராணுவத்தை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
காமன்வெல்த், ஸ்பெக்ட்ரம் என பல்வேறு ஊழல் புகாரில் சிக்கியுள்ள மத்திய காங்கிரஸ் அரசு, ஆட்சிப் பொறுப்பிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். கூடங்குளம் அணு மின் நிலையத்தைப் பொறுத்தவரை, பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த தொடர் நடவடிக்கைகளை பிரதமர் உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றார்.
உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் முதல் ஆளாக விஜயகாந்த்தான் பிரசாரத்தைத் தொடங்கினார். தொண்டைத் தண்ணீர் வற்ற அவர் ஊர் ஊராகப் போய்ப் பேசி வருகிறார். மற்ற முக்கியத் தலைவர்கள் இன்னும் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் சுறுசுறுப்பாக ஈடுபடவில்லை. தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், ஜி.கே.வாசன் போன்ற சிலர் மட்டுமே பிரசாரம் செய்து வருகின்றனர்.
அதிமுக கூட்டணித் தரப்பிலிருந்து பிரசாரம் செய்ய இதுவரை யாரும் களம் இறங்கவில்லை. இந்த நிலையில் ஒரு வழியாக சரத்குமார் தனது பிரசாரத்தை நாளை தொடங்குகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications