தூத்துக்குடியில் வாக்காளர்களுக்கு கள்ள நோட்டு கொடுத்த பெண் சுயேட்சை
தூத்துக்குடி: தூத்துக்குடி 56வது வார்டு சுயேட்சை வேட்பாளர் வாக்காளர்களுக்கு கொடுத்த பணம் கள்ள நோட்டு என தெரிய வந்துள்ளது. அவரிடம் பணம் வாங்கிய வாக்காளர் ஒருவர் கோவில் திருவிழாவில் மாற்ற முயன்றபோது குட்டு வெளிபட்டது.
தூத்துக்குடி அருகே உள்ளது அத்திமரப்பட்டி. தூத்துக்குடி நகராட்சி மாநகராட்சி ஆனபோது அத்திமரப்பட்டி பஞ்சாயத்து அதில் இணைக்கப்பட்டு 56வது வார்டாக ஆக்கப்பட்டது. தற்போது நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் இந்த வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு தி்முக, அதிமுக சுயேட்சைகள் என 8 பெண்கள் போட்டியிடுகின்றனர்.
அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட வரும் நிலையில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் எப்படியும் தான் வெற்றி பெற்றேத் தீர வேண்டும் என்று தீவிரம் காட்டி அதற்காக குறுக்கு வழியில் இறங்கினார். தேர்தல் ஆணையம் பணம் மற்றும் இலவச பொருட்கள் கொடுப்பதற்கு தடை விதித்திருக்கின்றது. இருப்பினும் அவர் கடந்த சில நாட்களுக்கு முன் வீடு, வீடாகச் சென்று ரகசியமாக ரூ. 500 கொடுத்துள்ளார்.
அவர் கொடுத்த பணத்தை வாங்கிய வாக்காளர் ஒருவர் குடும்பத்துடன் குலசேகரபட்டிணம் முத்தாரம்மன் திருவிழாவிற்கு சென்றார். அங்குள்ள கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு வேட்பாளர் கொடுத்த ரூ. 500ஐ கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்த கடைக்காரர் அதை கள்ள நோட்டு என தெரிவித்தார்.
சாமி கும்பிட்டுவிட்டு நேராக ஊருக்கு வந்த அவர் பெண் வேட்பாளரிடம் சென்று கள்ள நோட்டு கொடுத்து எங்களை ஏமாற்ற பார்க்கிறீர்களா என்று கூறி அவர் கொடுத்த ரூ.500ஐ தூக்கி எறிந்தார். இது வேட்பாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நல்ல நோ்ட்டு தானே கொடுத்தோம். இதில் கள்ள நோட்டு எப்படி வந்தது என அவரும் குழம்பினார்.
இதற்கிடையே கள்ள நோட்டுடன் வந்த வாக்காளர் ஊரில் உள்ள தங்களது உறவினர்களிடம் இது பற்றி கூறிவிட்டார். விவகாரம் பெரிதாகி விட்டதால் பிரச்சனை பெரிதாவதை உணர்ந்த அந்த பெண் வேட்பாளர் யார், யாருக்கெல்லாம் பணம் கொடுத்தாரோ அவர்களிடம் எல்லாம் சென்று நிலைமையை விளக்கி அந்த பணத்தை திரும்ப வாங்கிக் கொண்டார். (அதற்கு பதில் நல்ல நோட்டு கொடுக்கவில்லையாம்)
4 சுவற்றுக்குள் மடக்கிவிடலாம் என நினைத்த கள்ள நோட்டு விஷயம் காட்டுத் தீ போல பரவி முத்தையாபுரம் போலீசார் காதுக்கும் எட்டியது. அவர்கள் அத்திமரபட்டி சென்று சம்பந்தப்பட்ட பெண் வேட்பாளாரிடம் விசாரணை நடத்தினர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications