2 இந்தியர்கள் கோரக் கொலை: ஐக்கிய அரபு எமிரேட்டில் 2 இந்தியர்களுக்கு மரணத் தண்டனை

கடந்த 2009ம் ஆண்டு, ஐக்கிய அரபு எமிரேட்டில் வேலை செய்த 2 இந்தியர்கள் காணாமல் போயினர். போலீசாரின் விசாரணையில் அவர்களை 12 இந்தியர்கள், 1 பாகிஸ்தானியர் என மொத்தம் 13 பேர் சேர்ந்து கடத்தி சென்றது தெரிந்தது.
சட்ட விரோதமான வர்த்தகத்தில் ஏற்பட்ட மோதலில் பழிவாங்க கடத்தப்பட்ட அந்த 2 பேரையும், 13 பேர் கொண்ட கும்பல் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியது. பின்னர் கும்பலை சேர்ந்த 5 பேர் 2 பேரையும் நிர்வணப்படுத்தி பாலியல் சித்திரவதையையும் செய்தனர். அதிலும் கோபம் அடங்காத அந்த கொடூர கும்பல் இறுதியில் அந்த 2 பேரையும் ஒரு குழியில் போட்டு தீயிட்டு எரித்து கொலை செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த துபாய் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதில் குற்றம் சாட்டப்பட்ட 13 பேரில், 2 பேருக்கு தூக்கு தண்டனையும், மற்ற 2 பேருக்கு 15 ஆண்டு சிறைவாசமும், மீதமுள்ள 9 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கியது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் கொலை செய்யப்பட்டவர்கள் குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் 20 முதல் 30 வயதுக்குள் இருந்ததாக, வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications