"ஒரு யூனிட் ரத்தம் கொடுத்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்"

Subscribe to Oneindia Tamil

சூரத்: "ரத்தத்தை என்னிடம் தாருங்கள்; நான் சுதந்திரத்தை வழங்குகிறேன்," என்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சுதந்திர போராட்டத்தின்போது இளைஞர்களுக்கு ஆவேசத்துடன் அறைகூவல் விடுத்தார்.

இதே பாணியில் ரத்தத்தை தாருங்கள், பெட்ரோலை இலவசமாக பெற்று செல்லுங்கள் என்ற அறைகூவலுடன நூதன ரத்ததான முகாமை நடத்தி முடித்துள்ளது சூரத்தை சேர்ந்த சமூக சேவை அமைப்பு ஒன்று.

ஆம், சூரத் நகரை சேர்ந்த ஆத்மிய மித்ர மண்டல் என்ற தன்னார்வ அமைப்பு தீபாவளிக்கு முன்னதாக ஆண்டுதோறும் ரத்ததான முகாமை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், ரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் நூதனமான முறையில் ரத்ததான முகாமை அந்த அமைப்பு நேற்று முன்தினம் நடத்தியது.

ரத்தம் கொடுங்கள், பெட்ரோலை பெற்றுச் செல்லுங்கள் என்று அறிவிப்புடன் நடத்தப்பட்ட இந்த முகாமில் ஏராளமான இளைஞர்கள் பங்கு கொண்டு ரத்ததானம் செய்தனர்.

ஒரு யூனிட் ரத்தம் கொடுத்தவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலை அந்த அமைப்பு இலவசமாக வழங்கியது. இதனால், இந்த ரத்ததானம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நூதன ரத்ததானம் முகாம் குறித்து ஆத்மிய மித்ர மண்டல் அமைப்பு நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

"ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ரத்ததானம் செய்ய பலரை முன்வர செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த 'பெட்ரோல் ப்ரீ' ரத்ததான முகாமை நடத்தினோம்.

தற்போது பெட்ரோலின் விலை தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் எகிறி வருவதால், பெட்ரோலை இலவசமாக வழங்கினால் எளிதாக பிரச்சாரம் செய்ய முடியும் என்று கருதினோம்.

இதன் அடிப்படையிலேயே இந்த ரத்த தான முகாமை நடத்தினோம். இந்த முகாமில் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தவர்களுக்கு 50 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது," என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+