இந்தோனோசியாவில் நிலநடுக்கத்தில் 12 குழந்தைகள் உட்பட 50 பேர் காயம்
பாலி: இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று தாக்கியது. ஆனால் உயிர்சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
இந்தோனேசியா நாட்டின் பாலி தீவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள கடலின் அடியில் 60 கி.மீ தொலைவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. இதில் கடற்கரையில் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இருந்த வீடுகள், ஹோட்டல்கள் மற்றும் கட்டங்கள் குலுங்கியதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.
சில இடங்களில் கட்டிட சுவர்களும், மேற்கூரைகள் இடிந்து விழுந்தன. இதில் 12 பள்ளி குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்க உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் உயிர்சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
6.0 ரிக்டர் என பதிவாகிய இந்த நிலநடுக்கத்தினால் சற்றுநேரம் மக்களிடையே பீதி ஏற்பட்டது. கட்டிடங்கள் குலுங்கிய போது, மக்கள் வெளியே ஓடினர். சுனாமி எச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.












Click it and Unblock the Notifications