அன்றும், இன்றும், என்றும் எனது கனவில் கூட மாற்று சிந்தனை வராது- பரிதி இளம்வழுதி

சமீபத்தில் எனது சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகுகிறேன். வாழ்க உட்கட்சி ஜனநாயகம் என்று கூறி திமுக தலைவர் கருணாநிதிக்கு கடிதம் அனுப்பி திமுக வட்டாரத்தை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் அதிர வைத்தார் பரிதி.
இதையடுத்து அவர் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைவார் என்று செய்திகள் பரவின. இதுகுறித்து விளக்கமளிக்காமல் இருந்தார் பரிதி. இந்த நிலையில் தற்போது அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில்,
எனது நேர்மைக்கும், விசுவாசத்துக்கும் களங்கம் உண்டாக்கும் வகையில் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஜெயலலிதாவை வானளாவப் புகழ்ந்து, போற்றி அகவல் பாடி ஆங்கிலத்தில் புத்தகம் தயாரித்து, அந்தப் புத்தகக் கட்டுகள் என்றைக்காவது பயன்படும் என்ற எண்ணத்தில் இன்றைக்கும் பத்திரமாகப் பாதுகாத்து வருபவர்தான் என் மீது தவறான தகவல்களை திமுக தலைமைக்குத் தெரிவித்து வருகிறார்.
அண்ணா கூறியதைப்போல, இதையெல்லாம் தாங்கும் வல்லமையையும், நியாயத்தை எதிர்த்துப் போராடும் ஆற்றலையும் எனது தந்தை இளம்பரிதியிடம் இருந்து பெற்றிருக்கிறேன்.
எனவே, திமுகவிலிருந்தபடியே நியாயத்துக்காகப் போராடுவேனே தவிர, அன்றும், இன்றும், என்றும் என் கனவில்கூட மாற்று சிந்தனை வராது என்று பரிதி இளம்வழுதி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பரிதியை சமாதானப்படுத்த திமுக தலைமை முயற்சி செய்ததாகவும், ஆனால் அது பலன் தரவில்லை என்றும் கூறப்படுகிறது. அதேசமயம், பரிதி மீது மு.க.ஸ்டாலின் கடும் கோபத்துடன் இருப்பதாகவும் தெரிகிறது.
இந்தப் பின்னணியில் இன்று பெரியமேடு பகுதியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பரிதி பிரசாரம் செய்வார் என்று எழும்பூர் திமுக தெரிவித்துள்ளது.
-
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி!












Click it and Unblock the Notifications