For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏர்செல் ஃபைலை மட்டும் 44 நாட்கள் பார்த்த தயாநிதி-ரூ.550 கோடி ஆதாயம் பெற்றார்- சிபிஐ!

By Shankar
Google Oneindia Tamil News

Dayanidhi Maran
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் குடும்பத்தினர் ஏர்செல் - மேக்ஸிஸ் ஒப்பவந்தம் மூலம் ரூ 549.96 கோடி ஆதாயம் பெற்றார் என குற்றம்சாட்டியுள்ளது சிபிஐ.

மேலும் ஏர்செல் தொடர்பான ஃபைலை மட்டுமே அவர் 44 நாட்கள் பார்த்து வந்ததாகவும் சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலம் தயாநிதி மாறனின் அண்ணன் கலாநிதி மாறனுக்கு சொந்தமான நிறுவனம் ரூ 550 கோடியை ஆதாயமாகப் பெற்றுள்ளது. இது ராசா - கனிமொழி மீது சாட்டப்பட்டுள்ள ரூ.200 கோடி மோசடியை விட பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கைப்படி, மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு 7 ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களையும், அதன் துணை நிறுவனமான அஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க்குக்கு அதே அளவு லைசென்ஸ்களையும் ஒதுக்கியுள்ளார். இந்த நிறுவனம் சன் குழுமத்தில் 20 சதவீத பங்குகளைப் பெற்றுள்ளது (பங்கு ஒன்று ரூ.80 வீதம் ).

இதே போல அஸ்ட்ரோவில் கலாநிதி மாறன் 80 சதவீத பங்குகளை வாங்கியுள்ளார், ஒரு பங்கு ரூ 10 என்ற மதிப்பில். இந்த பங்கு பரிமாற்றத்தில் மட்டுமே ரூ 550 கோடியை மாறன் சகோதரர்களின் நிறுவனங்கள் ஆதாயமாகப் பெற்றுள்ளன. இது 2ஜி லைசென்சுக்காக மாறன் பெற்ற லஞ்சமாக சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

English summary
Former Communications Minister Dayanidhi Maran benefited indirectly by Rs 549,96,01,793 (Rs 549.96 crore) as quid pro quo for various favours to Aircel, owned by Malaysia-based company Maxis, alleges a new First Information Report (FIR) filed by the Central Bureau of Investigation (CBI) in the 2G spectrum case early this week. Firstpost has seen the FIR that has been filed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X