Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்திய மீனவர்களை ஆழ்கடலில் மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது: இலங்கை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: தமிழக மீனவர்களை ஆழ்கடலில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ளது.

இந்திய வெளியுறவுச் செயலாளர் ரஞ்சன் மதாய் 3 நாள் சுற்றுப்பயணமாக இலங்கை சென்றுள்ளார். அவர் இலங்கை அரசுடன் தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து பேசினார். அப்போது அவர் குறுகிய பாக் ஜலசந்தியில் மீன் பிடிப்பது குறித்து தான் இரு நாட்டு மீனவர்களும் அடிக்கடி மோதிக் கொள்கின்றனர். அதனால் வடமேற்கு இலங்கை மற்றும் தமிழக மீனவர்களை ஆழ்கடலில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மோதல்களைத் தவிர்க்கலாம் என்று கூறியுள்ளார்.

இது குறித்து இலங்கை மீன்பிடித் துறை அமைச்சர் ரஜித சேனரத்னா கூறியதாவது,

ஆழ்கடலில் மீன் பிடிக்க அனுமதிக்குமாறு கேட்பது எல்லாம் நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் அவ்வாறு அனுமதித்தால் இந்திய மீனவர்களுக்குத் தான் லாபம். வடமேற்கு இலங்கை மீனவர்கள் எங்கள் எல்லைக்குள் மட்டுமே மீன் பிடிப்பார்கள். ஆனால் இந்திய மீனவர்கள் இலங்கை நீர்பரப்பில் அல்லவா மீன்பிடிக்கிறார்கள்.

இந்திய மீனவர்கள் இங்கு வரக் கூடாது. அவர்கள் வேறு எங்காவது போய் மீன் பிடிக்கட்டும் என்று அவர் திமிராக கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+