விடுதலை சிறுத்தைகள் போட்டியிடாத இடங்களில் பாமகவுக்கு ஆதரவு: திருமாவளவன்
Subscribe to Oneindia Tamil

உள்ளாட்சித் தேர்தலில் பாமக போட்டியிடாத இடங்களில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஆதரவு வழங்குவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருந்தார். இந் நிலையில் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தைகள், இஸ்லாமியர் மற்றும் கிறித்தவ அமைப்புகளுடன் இணைந்து போட்டியிடுகிறது.
பா.ம.க. தாம் போட்டியிடாத தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்திருப்பதை மனப்பூர்வமாக வரவேற்று நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்துடன் விடுதலை சிறுத்தைகள் கூட்டணி போட்டியிடாத தொகுதிகளில் பா.ம.க. வேட்பாளர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications