வாக்காளர்களுக்குக் கொண்டு செல்லப்பட்ட பணம்- ரூ. 3.8 லட்சம் பறிமுதல்- 6 பேர் கைது
நெல்லை: வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக பணத்துடன் சென்ற தொழிலதிபர் உள்ளிட்ட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
உள்ளாட்சி தேர்தலை ஓட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க போலீசார் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. நாங்குநேரியை அடுத்த விஜயநாராயணம் பகுதியில் சிலர் காரில் பணம் கொண்டு செல்வதாகவும், அதை வாக்காளர்களுக்கு கொடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி போலீசார் சோதனை செய்தனர். காரில் 8 பேர் இருந்தனர். அவர்களில் 2 பேர் போலீசை கண்டதும் தப்பி ஓடினர். மற்ற 6 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் திசையன்விளை நாலாந்துரையை சேர்ந்த துரைப்பாண்டி, தோட்டிக்காரன் விளை மாடசாமி, வாழைத்தோட்டம் ராஜன், நெல்லை சந்திப்பு சிஎன் கிராமம் கணேஷ், அருணாசலம், மகாராஜா நகர் 4வது குறுக்குதெரு பெருமாள் என்பது தெரிய வந்தது.
இவர்களின் உறவினர் லட்சுமணன் என்பவர் நாங்குநேரி ஓன்றியம் 14வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு காங் சார்பில் போட்டியிடுகிறார். அவருக்காக தேர்தல் செலவுக்கு பணம் கொண்டு சென்றதும், விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 8 ஆயி்ரத்து 405ம், காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications