2வது கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் முடிவுக்கு வந்தது
சென்னை: தமிழகத்தில் 2வது கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.
தமிழகத்தில் முதல் கட்டமாக 10 மாநகராட்சிகள், 60 நகராட்சிகள், 259 பேரூராட்சிகள் மற்றும் 191 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இன்று முதல் கட்டமாக வாக்குப் பதிவு நடந்தது.
இதையடுத்து 19ம் தேதி 2வது கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதில் 65 நகராட்சிகள், 270 பேரூராட்சிகள், 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப் பதிவு நடைபெறும்.
இதற்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. இறுதி நாள் என்பதால் அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் தீவிரமாக இருந்தது.
அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் இறுதிக் கட்ட பிராசரத்தை முடுக்கி விட்டிருந்தனர். வாகன ஊர்வலம், ஆட்டோக்களில் மைக்குகளை கட்டி அலறுவது என படு தீவிரமாக இருந்தது இறுதிக் கட்ட பிரசாரம்.
19ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். முதல் கட்ட வாக்குப் பதிவில் பெருமளவில் முறைகேடுகள் நடந்ததாகவும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுகள் காற்றில் பறக்க விடப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் மொத்தமாக புகார் கூறியுள்ளன. எனவே 2வது கட்டத் தேர்தலிலாவது இந்தக் குறைகள் எழாமல் தேர்தல் ஆணையம் பார்த்துக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications