போடி என்று திட்டிய அமைச்சருக்கு 'நாசமாப் போவீங்க' என்று பெண் சாபம்!
வேலூர்: தான் கொடுத்த மனுவைப் படிக்காமலேயே தூக்கிப் போட்டதோடு மட்டுமல்லாமல், தூரப் போடி என்றும் திட்டிய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜய்யின் செயலால் அதிர்ச்சி அடைந்த அதிமுக பெண் பிரமுகர், அமைச்சரைப் பார்த்து நாசமாப் போவீங்க என்று சாபமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுகவின் 40வது ஆண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் விஜய் கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது மகளிர் அணியைச் சேர்ந்த சாரதா என்பவர் அமைச்சரை அணுகி ஒரு மனுவைக் கொடுத்தார். அதை வாங்கிய அமைச்சர் விஜய், படிக்கக் கூட செய்யாமல் அப்பெண்ணின் முகத்தி்ல வீசியதாக தெரிகிறது. மேலும் தூரப் போடி என்றும் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் ரோட்டில் நின்றபடி, கட்சிக்காரியையேய மோசமாக திட்டுகிறார்கள். என்னை ஏமாற்றி விட்டார்கள். இவர்கள் நாசமாகப் போவார்கள் என்று சாபமிட்டு சத்தமாக பேசினார். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பெண்ணிடம் என்ன விவகாரம் என்று விசாரித்தபோது, டாஸ்மாக் பார்களை 2 மாதத்திற்கு முன்பு ஏலம் விட்டனர். அதில் ஒரு பாரை இந்தப் பெண் ஏலத்தில் எடுத்துள்ளார். ஆனால் அவரை அணுகிய அமைச்சரின் அடிப்பொடிகளான கலையரசன் மற்றும் வேதகிரி ஆகியோர் பாரைக் கொடுத்து விடு, பதிலுக்கு கவுன்சிலர் பதவி தருகிறோம் என்று ஆசை காட்டியுள்ளனர். அதை நம்பி இவரும் பாரைக் கொடுத்துள்ளார். ஆனால் சொல்லியபடி கவுன்சிலர் சீட் தரவில்லை. இதனால்தான் மனு கொடுக்க வந்து அமைச்சரிடம் திட்டு வாங்கியுள்ளார்.
அமைச்சர் திட்டியதும், பதிலுக்கு மகளிர் அணிப் பிரமுகர் சாபமிட்டதையும் பொதுமக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்ததால் சலசலப்பு ஏற்பட்டது. உடனடியாக அமைச்சரை பாதுகாப்புடன் அங்கிருந்து கூட்டிக் கொண்டு சென்று விட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications