For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

109 முறை வாய்தா வாங்கி முதல் முறையாக விசாரணைக்கு வந்த ஜெ.-2000 போலீஸ் பாதுகாப்பு

Google Oneindia Tamil News

பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் 109 முறை வாய்தா வாங்கிய முதல்வர் ஜெயலலிதா இன்று முதல் முறையாக பெங்களூர் சிறப்பு கோர்ட்டுக்கு நேரில் ஆஜரானார். அவருக்கு மிக பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட 1500 கர்நாடக போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஜெயலலிதாவுக்காக விமான நிலையத்திலிருந்து கோர்ட்டுக்கு வரும் பாதை நெடுகிலும் மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தி்ல உள்ள கோர்ட் வளாகத்தைச் சுற்றி 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்திலிருந்து 500 போலீஸார்-வெடிகுண்டு நிபுணர்கள்:

இவர்கள் தவிர தமிழகத்திலிருந்து 500 போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு வழங்க பெங்களூர் வந்துள்ளனர்.

15 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கில் 109 முறை ஜெயலலிதா வாய்தா வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
1500 policemen from Bangalore and 500 from TN Police have been posted in Baganlore court for CM Jayalalitha's security. Jayalalitha is arriving in Bangalore to appear before special judge in Assets case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X