சேலத்தில் சுயேச்சை வேட்பாளர் நண்பருடன் வெட்டி கொலை
சேலம்: சேலத்தில் சுயேச்சை வேட்பாளர் நண்பருடன் சென்றபோது, வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம், அயோத்தியா பட்டணம் அடுத்த மேட்டுப்பட்டிதாதனூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு(26). திமுக-வை சேர்ந்த அவர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அக்கட்சி வாய்ப்பு வழங்கவில்லை. இதையடுத்து இந்த தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் மணிகண்டன என்பவருடன் பிரபு நேற்றிரவு மேட்டுப்பட்டியில் இருந்து அயோத்திப் பட்டணத்தை நோக்கி பைக்கில் சென்றார். அயோத்திப் பட்டணம் கோமு நகர் முனியப்பன் கோவில் அருகே வந்த போது, இருட்டில் மறைந்திருந்த கும்பல் ஒன்று, பைக்கை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் 2 பேரையும் மிரட்டிய கும்பல், தங்களிடம் இருந்த பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த பிரபு மற்றும் மணிகண்டன் உயிருக்கு போராடிய நிலையில் சாலையில் கிடந்தனர். இதில் பிரபு சம்பவ இடத்திலேயே பலியானார்.
அவ்வழியாக வந்த சிலர் மணிகண்டனை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவரும் இறந்தார். தகவல் அறிந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் விசாரணையி்ல ஏற்கனவே பிரபு, ஒரு கொலை வழக்கில் தொடர்பு இருப்பது தெரிந்தது. முன்விரோதம் காரணமாக இந்த கொலைகள் நடந்திருக்கலாம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications