தீபாவளி பண்டிக்கை திருச்சி, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
சென்னை: தீபாவளி கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்னையில் இருந்து கோவை, திருச்சி, நாகர்கோவில் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் நெரிசல் அதிகமாக காணப்படும். பயணிகள் அதிகளவில் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இதனால் ரயில்களில் கடும் நெரிசல் காணப்படும். அதை தவிர்க்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இதேபோல இந்தாண்டும் சென்னையில் இருந்து கோவை, திருச்சி, நாகர்கோவில் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தீபாவளி கூட்டநெரிசலை தவிர்க்கும் வகையில் திருச்சியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
வரும் 24ம் தேதி மாலை 6 மணிக்கு இந்த சிறப்பு ரயில்(வ.எண்: 06803) திருச்சியில் இருந்து புறப்பட்டு, 25ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.
வரும் 27ம் தேதி மாலை 6.15 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (வ.எண்:06801) திருச்சிக்கு, 28ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு சென்றடையும்.
வரும் 23ம் தேதி இரவு 11.30 மணிக்க சென்னை சென்டிரலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில்(வ.எண்:06001) 24ம் தேதி மதியம் 2 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். வரும் 26ம் தேதி நாகர்கோவில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்(வ.எண்:06002) 27ம் தேதி அதிகாலையி்ல் 3.30 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.
அதேபோல வரும் 25ம் தேதி மதியம் 3.15 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ரயில் (வ.எண்:06005) 26ம் தேதி காலை 5.30 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். நாகர்கோவிலில் இருந்து வரும் 30ம் தேதி மதியம் 12.40 மணிக்கு சிறப்பு ரயில் (வ.எண்:06006), மறுநாள் காலை 3.30 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.
(வ.எண்:06004) 27ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.
வரும் 25ம் தேதி இரவு 10.30 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (வ.எண்:06803), 26ம் தேதி காலை 6.50 மணிக்கு கோவை சென்றடையும். அதேபோல வரும் 26ம் தேதி இரவு 11.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (வ.எண்:06804) 27ம் தேதி காலை 7.45 மணிக்கு சென்னை வந்தடையும்.
மேலும் சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் நாளை முதல் வரும் 30ம் தேதி வரை 5 பெட்டிகள் கூடுதலாக சேர்த்து இயக்கப்படும். அதேபோல வரும் 22ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை திருச்செந்தூர் இருந்து சென்னை வரும் ரயில்களிலும் 5 பெட்டிகள் கூடுதலாக இயக்கப்படும். இதற்கான முன்பதிவு நாளை துவங்குகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications