மதுரையில் தீபாவளி டிரெஸ் பிடிக்காததால் தூக்கில் தொங்கிய 2 சகோதரிகள்
மதுரை: தீபாவளி பண்டிகைக்கு குறைந்த விலையில் புத்தாடை எடுத்துக் கொடுத்ததால் அதிருப்தியடைந்த சகோதரிகள் 2 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
மதுரை மாவட்டம், செல்லூர், கட்டபொம்மன் நகரில் உள்ள பாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் சாமிநாதன். வடை வியாபாரி. அவரது மனைவி செண்பகம். அவர்களுக்கு பாரதிராஜ் என்ற மகனும், சந்திரா(17), தமிழ்ச்செல்வி(15) என்ற 2 மகள்களும் உள்ளனர்.
சந்திரா அதே பகுதியில் உள்ள கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். தமிழ்செல்வி 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு தீபாவளி பண்டிகைக்காக குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் புத்தாடைகள் வாங்கினர். சாமிநாதன் தன் சக்திக்கு ஏற்ப குறைந்த விலையில் புத்தாடைகள் வாங்கிக் கொடுத்தார்.
பண்டிகை நாளன்று விலை குறைந்த ஆடையையா அணிவது என்று சந்திரா, தமிழ்செல்வி மனமுடைந்தனர். நேற்று முன்தினம் காலை அவர்கள் இருவரும் தந்தை சாமிநாதனிடம் பணம் வாங்கி கடைக்கு சென்றுவிட்டு வந்தனர். வீடு திரும்பியதில் இருந்தே அவர்கள் யாரிடமும் பேசவில்லை.
இந்நிலையில் மதியம் வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்ற 2 பேரும் வெளியே வரவே இல்லை. நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் செண்பகம் தனது மகள்களை வெளியே வருமாறு கூறியுள்ளார். ஆனால் அவர்கள் பதில் அளிக்காததால் சந்தேகமடைந்த செண்பகம் அந்த அறை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். அப்போது சகோதரிகள் இருவரும் துப்பாட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்த அவர் அதிர்ச்சியில் அலறினார்.
செண்பகத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கதவை உடைத்து 2 பேரின் உடல்களையும் மீட்டனர். இது குறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications