உள்ளாட்சித் தேர்தலில் காவல்துறை, தேர்தல் ஆணையத்துடன் அதிமுக புதிய கூட்டணி: சுப. வீரபாண்டியன்
மதுரை: உள்ளாட்சித் தேர்தலில் காவல்துறை, தேர்தல் ஆணையத்துடன் அதிமுக புதிய கூட்டணி அமைத்துள்ளதாக திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அப்போது பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. அதில் பல இடங்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. மேலும் பல இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்த தேர்தலிலும் திமுகவுக்கு தோல்வி தான்.
இந்த நிலையில் தோல்வி குறித்து திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் கூறியதாவது,
இந்த தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று வருகின்றது என்றும், இதனால் திமுகவிற்கு எதிர்காலம் இல்லை எனவும் சிலர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை வைத்து திமுகவை தவறாக எடை போடக் கூடாது. தேர்தலில் வெற்றி தோல்வி என்பது எல்லாம் சகஜம்.
ஏனென்றால் கடந்த முறை பென்னாகரம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் இழந்தது. அதே போல புதுச்சேரி இந்திரா நகர் தொகுதியிலும் அதிமுக டெபாசிட் இழந்தது.
எனவே, தற்போதுள்ள நிலவரத்தை வைத்து திமுகவின் எதிர்காலத்தை யாரும் தவறாக எடை போடக் கூடாது. திமுகவிற்கு நல்ல எதிர்காலம் உண்டு.
சட்டசபை தேர்தலில் அதிமுக பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. தற்போது உள்ளாட்சித் தேர்தலில் காவல்துறை, தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி வைத்துள்ளது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications