தமிழகத்தில் யானைகளுக்கு இனி வாரத்தில் 5 நாள் தான் வேலை- 60 வயதில் 'ரிடையர்மெண்ட்'!

கடந்த அதிமுக ஆட்சியில் கோவில் யானைகளுக்கு ஓய்வும் புத்துணர்ச்சியும் அளிக்க முகாம்கள் நடத்தப்பட்டன. இந் நிலையில் இப்போது யானைகளுக்கு மேலும் பல சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன்படி வன விலங்குகள் சட்டத்தின் யானைகள் நிர்வாக விதிகளில் பல திருத்தங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, யானைகளை தெருக்களில் நடக்க வைத்து பிச்சை கேட்க வைப்பது போன்ற செயல்கள் முழு அளவில் தடை செய்யப்படுகின்றன. யானைகளை அடிப்பது, உதைப்பது, நீண்ட தூரம் நடக்க வைப்பது, அதிக சுமையை ஏற்றுவது, கொடுமைப்படுத்துவது ஆகியவை கடும் குற்றங்களாகும்.
அவை செக்ஸ் ரீதியில் மிகுந்த உணர்ச்சிப்பூர்வமான காலத்தில் இருக்கும்போது அவைகளை பணியில் ஈடுபடுத்தக் கூடாது.
மேலும் நைலான் கயிறு, இரும்பு சங்கிகளால் யானைகளைக் கட்டிப் போடுவதும் குற்றமாகும்.
யானைகளுக்கு வாரத்துக்கு 5 நாட்கள் தான் வேலை தர வேண்டும். மழைக் காலத்தில் முழு ஓய்வு தர வேண்டும்.
அதே நேரத்தில் யானைகளுக்கு 60 வயதில் ரிடையர்மெண்ட் தரப்பட்டுவிட வேண்டும். 60 வயதுக்கும் மேலான யானைகள் ஆரோக்கியமாக இருந்தால், கால்நடை மருத்துவரிடமும் தலைமை வனத்துறை வார்டனிடமும் உரிய சான்றிதழ் பெற்று, அவற்றை பயன்படுத்தலாம். ஆனால், கடுமையான பணிகளைத் தரக் கூடாது. எளிதான பணிகளைத் தருவதோடு யானைகளை உரிய முறையில் நலம் பேணவும் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications