சபரிமலை: பூஜை கட்டணங்களை உயர்த்த தேவசம்போர்டு கேரள உயர் நீதிமன்றத்தில் மனு
கொல்லம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் பூஜை கட்டணங்களை உயர்த்த அனுமதி கோரி தேவசம்போர்டு கேரள உயர் நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலை திருவிதாங்கூர் தேவசம்போர்டு நிர்வகித்து வருகிறது. கோவில் பூஜை கட்டணங்களை தேவசம் போர்டு 2 மாதங்களுக்கு முன்பு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென பல மடங்கு உயர்த்தியது. இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை எதிர்த்து அப்போதைய சபரி்மலை சிறப்பு ஆணையர் பஞ்சாபிகேசன் கேரள உயர் நீதி்மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் பக்தர்களுக்கு முறையாக அறிவித்து அவர்களின் கருத்தை கேட்டறிந்த பிறகே கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து கட்டண உயர்வை தேவசம்போர்டு வாபஸ் பெற்றது. இந்த நிலையில் பூஜை கட்டணத்தை மீண்டும் உயர்த்த தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரி தேவசம்போர்டு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இது தவிர ஐயப்பனை மிக அருகே நின்று தரிசிக்க புதிதாக டிக்கெட் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தரிசனத்திற்கு ரூ. 2,500 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. அதிகாலையில் நடை திறந்ததும் நிர்மால்ய தரிசனம் நடைபெறும். இந்த தரிசனத்தின் போதும், உஷபூஜை, உச்சிகால பூஜை, தீபாராதனை, இரவு பூஜை ஆகிய பூஜைகளின் போதும் ரூ.2,500 கட்டினால் மட்டுமே கோவில் அருகே நின்று ஐயப்பனை தரிசிக்க முடியும்.
வரும் 25ம் தேதி சித்திரை ஆட்ட திருநாளை முன்னி்ட்டு கோவில் நடை திறக்கப்படுகிறது. அன்று முதல் கட்டண உயர்வை அமுல்படுத்த கேரள உயர் நீதிமன்றத்திடம் தேவசம்போர்டு அனுமதி கோரியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications