ஓரிரு நாளில் வடகிழக்கு பருவமழை துவங்கும்: வானிலை மையம் தகவல்

வழக்கமாக ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யும். அந்த சீசன் முடிந்துள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒருவேளை வடகிழக்கு பருவமழை காலம் துவங்கிவிட்டதால் தான் மழை பெய்கிறதோ என்று மக்கள் நினைத்தனர். ஆனால் தற்போது பெய்து வரும் மழைக்கு காற்றின் சுழற்சி தான் காரணம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேசமயம் இன்னும் ஓரிரு நாளில் வடகிழக்கு பருவமழை துவங்கும் என்றும் அது மேலும் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ். ஆர். ரமணன் கூறுகையில்,
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முற்றிலும் விலக்கப்பட்டுவிட்டது. தற்போது கீழைக்காற்று வீசத் துவங்கியுள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
எனவே, இன்னும் ஓரிரு நாட்களில் வடகிழக்கு பருவமழை துவங்கும். அதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது என்றார்.
வடகிழக்கு பருவமழைக் காலத்தின்போது தான் தமிழகத்திற்கு அதிக மழை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு வழக்கமான அளவில் மழை இருக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications