ஏப்ரல் மாதத்திற்குள் சங்கரன்கோவிலுக்கு இடைத் தேர்தல்- பிரவீன்குமார்
Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில் தனித் தொகுதியாகும். இங்கு அதிமுக சார்பில் கருப்பசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு, அமைச்சராகவும் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் ரத்த புற்றுநோய் காரணமாக அவர் மரணமடைந்தார். இதனால் தொகுதி காலியாகியுள்ளது.
இதனால் சங்கரன்கோவிலுக்கு இடைத் தேர்தல் நடத்த வேண்டும். இடைத் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமாரிடம் கேட்டபோது, ஏப்ரல் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என்று பதிலளித்தார்.
ஒரு தொகுதி காலியாகி விட்டால் அங்கு ஆறு மாதத்திற்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும்.












Click it and Unblock the Notifications