Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியா அல்லது அமெரிக்கா போர் தொடுத்தால் பாகிஸ்தானைத்தான் ஆதரிப்போம்-கர்சாய்

Subscribe to Oneindia Tamil

Hamid Karzai
இஸ்லாமாபாத்: இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ அல்லது வேறு எந்த நாடுமோ, பாகிஸ்தானை தாக்கினால், போர் தொடுத்தால், நாங்கள் எங்கள் சகோதரன் பாகிஸ்தானைத்தான் ஆதரிப்போம் என்று ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்ஸாய் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஸின்ஹுவா செய்தி நிறுவனம் கர்ஸாயின் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

தலிபான்களிடம் சிக்கி சீரழிந்த ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்த அமெரிக்கப் படையினர், ஆப்கானிஸ்தானை மையமாக வைத்து தலிபான்களை வேட்டையாடி வருகின்றனர். கூடவே பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்தபடி ஆப்கானிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்தி வரும் அல் கொய்தா உள்ளிட்ட தீவிரவாதிகளுடனும் மோதி வருகின்றன.

சீரழிந்து போய் விட்ட ஆப்கானிஸ்தானை கட்டி எழுப்பும் முக்கியப் பணியில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தானை தத்தெடுத்துக் கொண்டது போல பல ஆயிரம் கோடி பணத்தை இறைத்து ஆப்கானிஸ்தானில் பல வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது இந்தியா.

இந்த நிலையில் இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ அல்லது வேறு நாடோ பாகிஸ்தானை தாக்கினால், போர் தொடுத்தால் நாங்கள் பாகிஸ்தானுக்கு முழு ஆதரவாக இருப்போம் என ஆப்கன் அதிபர் ஹமீத் கர்ஸாய் அதிரடியாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அல்லது வேறு நாடுகளுடன் சண்டை மூளக் கூடாது என்றே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் ஒரு வேளை நாளையே பாகிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்தால் நாங்கள் பாகிஸ்தானுக்குத்தான் ஆதரவாக இருப்போம். காரணம், பாகிஸ்தான் எங்களது சகோதரன்.

பாகிஸ்தான் மீது யாராவது போர் தொடுத்தால் பாகிஸ்தான் மக்கள் ஆப்கானிஸ்தானின் உதவியைத்தான் நாடுவார்கள். அப்போது பாகிஸ்தானியர்களுக்கு உதவ, கை கொடுக்க நாங்கள் தயாராக இருப்போம்.

பாகிஸ்தானின் சகோதரர்கள் நாங்கள். 1979-80ல் ரஷ்யா எங்களை ஆக்கிரமித்தபோது பாகிஸ்தானியர்கள்தான் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர். எங்களை சகோதரர்களாக கருதி எங்களுக்கு உதவினர் பாகிஸ்தானியர். தங்களது உள்ளங்களை மட்டுமல்லாமல் இல்லங்களையும் கொடுத்தவர்கள் அவர்கள். எங்களுக்கு உதவிய அவர்களுக்கு நாங்கள் துரோகம் இழைக்க முடியாது, ஏமாற்ற முடியாது.

எனவே அமெரிக்காவோ, இந்தியாவோ அல்லது வேறு எந்த நாடோ பாகிஸ்தான் மீது போர் தொடுத்தால் எங்களது முழு ஆதரவும் பாகிஸ்தானுக்குத்தான் இருக்கும்.

எங்களுக்கு பாகிஸ்தான் அரசு நிர்வாகம் பல துயரங்களை இழைத்துள்ளது. நான் அதை மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் எங்களது சகோதரர்கள். அதை நாங்கள் மறக்க மாட்டோம்.

இந்த நேரத்தில் ஆப்கானிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே கையெழுத்தாகியுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்தும் நான் விளக்க விரும்புகிறேன். இதுதிடீரென நடந்த ஒப்பந்தம் அல்ல, பல காலமாகவே பேசப்பட்டு வந்த ஒன்றுதான். இதற்கும், பாகிஸ்தானுடனான எங்களது உறவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார் கர்ஸாய்.

கர்ஸாயின் இந்தக் கருத்து அமெரிக்காவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹக்கானி தீவிரவாதக் குழு மீது அமெரிக்கா கடும் ஆத்திரத்தில் உள்ளது. ஆனால் அந்த குழு மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் மறுத்து விட்டது. இதற்காக அமெரிக்காவுடன் நேரடி மோதலிலும் ஈடுபட அது தயாராக உள்ளது. இதையடுத்து ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தான் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் அமெரிக்கா படைகளைக் குவித்துள்ளது. அதேபோல பாகிஸ்தானும் தனது பகுதியில் படைகளைக் குவித்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள பதட்டமான நிலையில் கர்ஸாயின் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+