கார்-பஸ் மோதல்: புதுச்சேரிக்கு சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொல்கத்தாவை சேர்ந்த குடும்பம் ஒன்று சென்னையில் மருத்துவ சிகிச்சை பெற வந்த போது, புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றபோது விபத்தில் சிக்கினர். இதில் 5 பேர் பலியாகினர். 5 வயது சிறுமி மட்டும் காயமின்றி உயிர் தப்பினார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையி்ல் சிகிச்சைக்காக, கொல்கத்தாவை சேர்ந்தவர் ஒரு குடும்பத்தினர் வந்திருந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து ஊருக்கு செல்லும் முன் புதுச்சேரிக்கு சுற்றுலா செல்ல தீர்மானித்தனர். அதற்காக வாடகை கார் ஒன்றில் 8 பேர் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சென்று அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர்.

சுற்றுலா முடிந்து நேற்று மதியம் புதுச்சேரியில் இருந்து டவேரா காரில் சென்னை திரும்பினர். புதுச்சேரியை சேர்ந்த மாரியப்பன்(51) காரை ஓட்டினார். மாலை 3.15 மணியளவில் டவேரா கார் கல்பாக்கம் அடுத்த காத்தான்கடை சந்திப்பு அருகே வந்த போது, சாலையில் எதிரே வந்த புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக வால்வோ விரைவு பஸ் மீது மோதியது.

இதில் கார் டிரைவர் மாரியப்பன் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்தில் காரில் பயணித்த 4 பேரும், பஸ் நடத்துனர் ரவிசந்திரனும்(51) படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்த மாமல்லபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆண் ஒருவர் இறந்தார். மற்ற 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் காரில் பயணித்த 5 வயது சிறுமி, காயமின்றி உயிர் தப்பினார். விபத்து குறித்த பயத்தில் இருந்து மீளாமல் உள்ள சிறுமியை போலீஸ் பாதுகாப்பில் வைத்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய குடும்பத்தினர் குறித்து பெயர் மற்றும் மற்ற விபரங்கள் தெளிவாக தெரியவில்லை. மத்திய அமைச்சர் திவாரியினய உறவினர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து கூவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+