தீபாவளி பண்டிகை: 2 நாட்களில் ரூ.160 கோடி மது வகைகள் விற்பனை

தீபாவளி பண்டிக்கை கடந்த 2 நாட்களாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. பண்டிகை நாட்களில் மதுவகைகளை உட்கொள்ளும் பழக்கம் இளைஞர்களிடையே வழக்கம். இதனால் டாஸ்மாக் கடைகளில் பண்டிகை நாட்களில் மதுவகைகளுக்கு தட்டுபாடு ஏற்படுவது உண்டு.
இதை தவிர்க்க தீபாவளி பண்டிகைக்காக தமிழகம் முழுவதும் உள்ள 6,696 டாஸ்மாக் கடைகளில் அதிகளவிலான மதுபாட்டிகள் விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. தீபாவளி பண்டிகை விற்பனைக்காக ஐஎம்எப்எல், பீர், ஒயின் மதுபானங்கள், டாஸ்மாக் குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த 25 மற்றும் 26ம் தேதி மட்டும், அயல்நாட்டு மதுபானங்கள் 2,30,000 கேஸ்கள் விற்பனையாகி உள்ளன. பீர் வகைகள் 1,70,000 கேஸ்கள் விற்பனையானது.
இதன்மூலம் மொத்தம் 160 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இதில் சென்னையில் உள்ள 441 கடைகளில் மட்டும் 19 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகி உள்ளது. இதன்மூலம் கடந்தாண்டை விட 58 கோடி ரூபாய் மதுபானங்கள் கூடுதலாக விற்பனையாகி உள்ளது. மேலும் இந்தாண்டு 150 கோடி ரூபாய் விற்பனை செய்ய நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications