தமிழகத்தில் தீபாவளிக்கு பட்டாசு வெடித்து 43 தீவிபத்துகள், பலி இல்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தீபாவளியன்று மழை பெய்ததால் பட்டாசு வெடித்து ஏற்படும் தீவிபத்துகள் இந்தாண்டு வெகுவாக குறைந்துள்ளது. இந்தாண்டு தமிழகம் முழுவதும் மொத்தம் 43 தீவிபத்துகள் நடந்துள்ளது.

கடந்த 26ம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால், மக்கள் மழை இல்லாத நேரங்களில் மட்டும் பட்டாசுகளை வெடித்தனர். இதனால் வழக்கமாக தீபாவளி அன்று பட்டாசு வெடித்து ஏற்படும் தீவிபத்துகள் குறைந்தன.

தீபாவளி அன்று காலை முதலே மழை விட்டுவிட்டு பெய்து வந்தது. இதனால் மாலை நேரத்தில் மட்டுமே மக்கள் பட்டாசு வெடிக்க முடிந்தது. இந்தாண்டு தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்ததில் 43 தீவிபத்து சம்பவங்கள் நடந்ததுள்ளதாக, தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதில் சென்னையில் மட்டும் 23 தீவிபத்து சம்பவங்கள் நடந்ததுள்ளது. ஆனால் இதில் யாரும் காயம் அடைந்ததாக தகவல் இல்லை. கடந்தாண்டு தீபாவளிக்கு பட்டாசு வெடித்து 191 இடங்களில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 38 படுகாயமும், 119 பேர் லேசான காயமும் அடைந்தனர். ஆனால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+