அமெரிக்காவில் ஏரியில் மூழ்கி கே.என். நேருவின் தங்கை மகன் மரணம்
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தங்கை மகன் பிரசாந்த் அமெரிக்காவில் ஏரியில் மூழ்கி மரணம் அடைந்தார். அவரது உடல் விமானம் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தங்கை உமாதேவி. அவருக்கு தீபிகா என்ற மகளும், பிரசாந்த்(21) என்ற மகனும் உள்ளனர். உமாதேவி தனது குடும்பத்தோடு கடலூர் மாவட்டம் வடலூரில் வசித்து வருகிறார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் நேருவின் மகன் அருணுக்கும், தீபிகாவும் நிச்சயதார்த்தம் நடந்தது. பிரசாந்த் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பொறியியல் மேற்படிப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அங்குள்ள ஏரி ஒன்றில் குளிக்கச் சென்றார்.
ஏரியை அடைந்ததும் அவர் அதில் குதித்தார். அப்போது அவரது தலையில் பலமாக அடிபட்டது. உடனே அவரது நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பிரசாந்த் ஏற்கனவே இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பிரசாந்தின் உடல் விமானம் மூலம் இன்றிரவு சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறது. இந்த தகவல் அறிந்த நேரு இன்று காலை சென்னை புறப்பட்டு சென்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications