முதலில் ராம்தேவ், அடுத்து அன்னா, தற்போது ஸ்ரீ ஸ்ரீயா?: திக்விஜய் தாக்கு

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பிளான் ஏ-படி முதலில் பாபா ராம்தேவை கொண்டு வந்தது. திட்டம் டமால் ஆக அடுத்து பிளான் பி-ஆக அன்னா ஹஸாரேவை பிரசாரம் செய்ய வைத்தது. அந்த பிளான் தற்போது கேள்விக்குறியாக உள்ள நிலையில் அடுத்து பிளான் சி-ஆக வாழும் கலை அமைப்பின் நிர்வாகி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை விரைவில் பிரசாரத்தில் ஈடுபடுத்த உள்ளது.
ஆர்.எஸ்.எஸ். பாஜகவுடன் கூட்டணியமைத்து தான் இவ்வாறு ஒவ்வொருத்தராக அரசுக்கு எதிராக பிரசாரம் செய்ய வைக்கிறது. பாஜக செய்த ஊழல்களை மறைத்து மக்களின் கவனத்தை திசை திருப்பத் தான் இவ்வாறு செய்து வருகிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு அரசு ஊழலுக்கு எதிராக பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது. தகவல் அறியும் சட்டத்தை கொண்டு வந்ததே எங்கள் அரசு தான் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியதாவது,
ஊழலுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும். நேற்று கூட சூரத்தில் சுமார் 1 லட்சம் மக்களை லஞ்சம் வாங்க மாட்டோம், கொடுக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுக்கச் செய்தேன். காங்கிரஸின் சரிவிற்கு வழிவகுக்கும் திக்விஜய்க்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications