வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி - சென்னை நர்ஸ் மீது புகார்
சென்னை: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கேரளாவை சேர்ந்த 9 வாலிபர்களிடம் இருந்து 25 லட்சம் ரூபாய் பணத்தை பெற்று கொண்டு ஏமாற்றியதாக சென்னையை சேர்ந்த நர்சு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், முலாயம்அய்யப்பன்காவு பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ். இவர் நேற்று காலையில் தனது நண்பர்கள் ரின்டோ ராஜூ, சஜாய் ஜாய், மெபின், அனுப், அனுப்கோபால், பிஜோஜான், கிளாட்சன் ஜார்ஜ், ஆசாபாஜூ ஆகியோருடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்துக்கு வந்திருந்தார்.
கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங்கை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது, கேரளாவை சேர்ந்த நாங்கள் அனைவரும் டிப்ளமோ நர்சிங் படிப்பு முடித்துள்ளோம். நான் திருச்சூரில் உள்ள ஜூபிளி மிஷன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை செய்து வருகிறேன்.
சென்னை சிட்லபாக்கத்தில் எனது சகோதரியின் வீடு உள்ளது. அங்கு அடிக்கடி வந்து சென்றபோது, அப்பகுதியை சேர்ந்த ரங்கநாயகி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சென்னையி்ல் நர்சாக பணியாற்றி வந்த ரங்கநாயகியும், அவரது சகோதரர் கண்ணனும் சேர்ந்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் நர்சிங் படிப்பு முடித்தவர்களுக்கு அதிகம் சம்பளம் கிடைக்கிறது.
அங்கு செல்ல விசா மற்றும் பயண செலவுகளுக்காக 5 லட்சம் ரூபாய் வரை செலவாகும். அதற்கு முன்பணம் தேவை என கேட்டனர். இதை நம்பிய நான் எனது நண்பர்கள் 9 பேருடன் சேர்ந்து ரங்கநாயகியிடம் 24,90,000 ரூபாய் பணத்தை கொடுத்தேன்.
ஆனால் இதுவரை வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திரும்ப தரவில்லை. இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசாரிடம் முதலில் புகார் அளித்தோம். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்களை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த புகார் மனுவை பெற்று கொண்ட கூடுதல் கமிஷனர் அபய்குமார்சிங் வழக்கு பதிந்து விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications