தமிழ் மொழிப்பெயர்ப்பு துறைக்கு புதிய துணை செயலர் - கேரளா அனுமதி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள தலைமை செயலகத்தில் உள்ள தமிழ் மொழிப்பெயர்ப்பு துறைக்கு துணை செயலாளர் அந்தஸ்து கொண்ட புதிய பதவி உருவாக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் இடுக்கி, பாலக்காடு, திருவனந்தபுரம் மாவட்டங்களில் தமிழர்களும், காசர்கோடு, மாவட்டத்தில் கன்னடர்களும், அதிகம் வசிக்கின்றனர். இதனால் தமிழ், கன்னடம் மொழி சிறுபான்மை மக்களின் நலனுக்காக கேரள அரசு தலைமை செயலகத்தில் 40 ஆண்டுகளுக்கு முன் தமிழ், கன்னடம் மொழி பெயர்ப்பு துறை ஏற்படுத்தப்பட்டது.

தமிழ் மொழி பெயர்ப்பு துறையில் தற்போது முதுநிலை மொழி பெயர்ப்பாளர் உள்பட 7 பேர் பணியாற்றுகின்றனர். மொழி சிறுபான்மை மக்களுக்காக சட்டபேரவையில் இயற்றப்படும் சட்டம், மசோதா போன்றவற்றை அந்தந்த மொழிகளில் இந்த துறை மொழிப்பெயர்ப்பு செய்து வருகிறது.

இவ்வாறு மொழி பெயர்ப்பு செய்யப்படும் கோப்புகளுக்கு துணை செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிதான் இறுதி அங்கீகாரம் அளிக்க வேண்டும். ஆனால் இந்த அதிகாரிக்கோ தமிழோ, கன்னடமோ தெரியாது. மொழி தெரியாமல் கோப்புகளில் என்ன தகவல் உள்ளது என்பது கூட தெரியாமல் கையெழுத்து போடுகிறார்.

கடந்த 40 ஆண்டுகளாக இதுதான் நடைமுறையில் உள்ளது. எனவே தமிழ், கன்னட மொழி பெயர்ப்பு துறையை சேர்ந்த அலுவலருக்கே பதவி உயர்வு அளித்து துணை செயலாளர் பதவியில் அமர்த்த வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் தமிழ், கன்னட மொழி பெயர்ப்பு துறைக்கு புதிய துணை செயலாளர் பதவியை உருவாக்குவதற்கான உத்தரவை முதல்வர் உம்மன்சாண்டி பிறப்பித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+