For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெரும் அதிர்ச்சியில் கருணாநிதி - செயற்குழுவைக் கூட்டுகிறது திமுக-காங். உறவு கெடாது எனவும் அறிவிப்பு!

Google Oneindia Tamil News

Karunanidhi and Kanimozhi
சென்னை: கனிமொழிக்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்டு விட்டதால் பெரும் அதிர்ச்சியும், குழப்பமும், விரக்தியும் அடைந்துள்ள திமுக தனது கட்சியின் செயற்குழுக் கூட்டத்தை நவம்பர் மத்தியில் கூட்ட முடிவு செய்துள்ளது. மேலும் காங்கிரஸுடனான உறவு கெடாது என்றும் திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளதால் இந்த செயற்குழுவில் என் முடிவெடுக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

கனிமொழி விவகாரம் தொடர்பாக எந்த முடிவையும் துணிகரமாக எடுக்க முடியாத மாபெரும் இக்கட்டான நிலையி்ல் உள்ளது.

2ஜி வழக்கின் தொடக்கத்திலிருந்தே திமுகவுக்கு பெரும் நெருக்கடி தொடங்கி விட்டது. இந்த சிக்கல் அதிகரித்து அதிகரித்து தற்போது இடியாப்பச் சிக்கலாக மாறி நிற்கிறது. எந்த முடிவையும் எடுக்கவே முடியாத நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியை ஆரம்பத்தில் திமுக மிரட்டிப் பார்த்தது. ஆனால் பின்னர் அதையும் செய்ய முடியாத அளவுக்கு நிலைமை மோசமானது -கனிமொழி கைதின் மூலம். முள்ளில் சிக்கிய சேலையை பழுதில்லாமல் எடுக்கும் நிலையில்தான் தற்போது திமுக உள்ளது.

காங்கிரஸை சற்றும் பகைத்துக் கொள்ள முடியாத நிலையில்தான் திமுக உள்ளது. மேலும் மத்திய அரசிலிருந்தும் வெளியே வர முடியாத நிலையில் உள்ளது. இதில் எதைச் செய்தாலும் பாதகம் நமக்குத்தான் என்பதால் திமுகவால் அந்த முடிவு எதையும் எடுக்க முடியவில்லை. கடைசி முறையாக டெல்லிக்கே சென்று சோனியா காந்தியைப் பார்த்து கனிமொழி விவகாரம் தொடர்பாக கோரிக்கை விடுத்துப் பார்த்தார் கருணாநிதி. அதற்குப் பலன் கிடைப்பது போல தெரிந்தது. ஆனால் சுப்ரீ்ம்கோர்ட்டின் கடும் கண்டனம் காரணமாக சிபிஐ பின்வாங்கி விட்டது. இதனால் கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்காமல் போய் விட்டது.

இந்த நிலையில் நவம்பர் மாத மத்தியில் திமுகவின் செயற்குழுக் கூட்டம் நடைபெறவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தக் கூட்டத்தில் என்ன முடிவெடுக்கப்படும் என்று தெரியவில்லை. நிச்சயம் காங்கிரஸுடன் உறவு முறிவு, மத்திய ஆட்சியிலிருந்து விலகல் போன்ற முடிவுகள் எடுக்கப்படாது என்பது மட்டும் தெரிகிறது.

காங்கிரஸுடன் உறவு கெடாது

கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த திமுக முன்னணியினர் கூறுகையில், இதனால் காங்கிரஸுடனான உறவில் பாதிப்பு வராது. இதை நாங்கள் சட்ட ரீதியாக சந்தித்து போராடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

கடும் அதிர்ச்சியில் கருணாநிதி

இதற்கிடையே இந்த தீர்ப்பால் திமுக தலைவர் கருணாநிதி கடும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளதாக திமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடன் மூத்த மகள் செல்வி இன்று உடன் இருக்கிறார். கருணாநிதிக்கு அவர் ஆறுதல் கூறியதாக தெரிகிறது.

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தால் அழைத்து வருவதற்காக டெல்லி சென்றிருந்த ஸ்டாலின் இன்று அவசரமாக சென்னை திரும்புகிறார். அவர் வந்த பின்னர் கருணாநிதியைச் சந்தித்து ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து திமுக முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
DMK set to convene its executive committee meeting in Mid Nov in the backdrop of Kanimozhi's bail rejection. The party supremo Karunanidhi is shell shocked after the CBI court's rejection of bail to Kanimozhi. The party sources said that the ties with Congress will not be affected due to the Kanimozhi issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X