கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை வெடிகுண்டு வழக்கில் சிக்க வைத்த ஆசிரியை கைது
நாகர்கோவில்: கள்ளக்காதலுக்கு இடையூறாக கணவன் இருந்ததால் அவரை திட்டமிட்டு வெடிகுண்டு வழக்கில் சிக்க வைத்த ஆசிரியை உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குமரி மாவட்டம் கொல்லங்கோடு பாலவிளையைச் சேர்ந்தவர் ஜெயக்கென்னடி. அவரது மனைவி விஜி. ஆசிரியை. வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஜெயக்கென்னடி அண்மையில் தான் ஊருக்கு வந்தார். அவர்களுக்கு குழந்தை இல்லாததால் திருவனந்தபுரத்தில் சிகிச்சை எடுப்பதற்காக வெளிநாடு திரும்பும் தேதியை தள்ளிப்போட்டார்.
இந்நிலையில் அவரது வீட்டில் பயங்கர வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஜெயக்கென்னடி போலீசார் கைது செய்து விசாரித்தனர். அத்வானி வந்த பாதையில் வைக்கப்பட்ட வெடிகுண்டுக்கும் இதற்கும் சம்பந்தம் உண்டா என்றும் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் நிரபராதி என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசாரின் சந்தேகப் பார்வை விஜி மீது விழுந்தது. அவரது செல்போனைப் பார்த்ததில் அவர் சாமியார்மடத்தை சேர்ந்த ஆஸ்டின் ஜெயராஜ் என்பவருடன் அடிக்கடி பேசி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் ஜெயராஜைப் பிடித்து விசாரித்தனர். அப்போது விஜிக்கும், ஜெயராஜுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்தது. வெளிநாட்டில் இருந்து ஜெயக்கென்னடி வந்துவி்ட்டதால் அவர்களால் சந்தித்துக்கொள்ள முடியவில்லை. அதனால் ஜெயராஜ் வெடிபொருட்கள் வாங்கி அதை ஜெயக்கென்னடி வீட்டு பின்புறத்தில் வைத்துள்ளார். இது விஜிக்கும் தெரியும்.
இதைத் தொடர்ந்து போலீசார் ஆஸ்டின் ஜெயராஜ், விஜி, அவரது தாயார், வெடிபொருட்கள் வாங்கிக் கொடுத்த ஜெயச்சந்திர பூபதி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
விஜி கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, ஆஸ்டின் ஜெயராஜ் என் குடும்பத்துக்கு பல வகைகளில் உதவியுள்ளார். ஆனால் அவருடன் பழகுவது என் கணவருக்கு பிடிக்கவில்லை. வெளிநாட்டிலிருந்து வந்த பின், என்னை கண்காணித்ததோடு, சித்திரவதையும் செய்தார். ஆஸ்டினை சந்திக்க விடாமல் செய்தார். மீண்டும் வெளிநாடு செல்லும் முடிவை என் கணவர் தள்ளி வைத்ததால், அவரை விட்டு பிரிய முடிவு செய்து, யோசனை செய்து கொண்டிருந்த போது, மதுரையில் அத்வானி வருகையின் போது வெடிகுண்டு வைக்கப்பட்ட செய்தி வெளியானது.
எனவே, இதில் என் கணவரை சிக்க வைக்க முடிவு செய்தோம். எனது போனை போலீசார் வாங்கிய போதே, நாம் மாட்டிக் கொள்வோம் என தெரிந்து விட்டது. நான் பெரிய துரோகம் செய்து விட்டேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications