டாக்டர் இல்லாமலேயே தடுப்பூசி போடும் திட்டம் மீண்டும் அறிமுகம்
நெல்லை: டாக்டர் இல்லாமலேயே தடுப்பூசி போடும் திட்டம் தமிழகம் முழுவதும் நேற்று மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் செவிலியர்கள் களப்பணிக்கு அனுப்பப்பட்டனர்.
தாய், சேய் நலம் பேணும் வகையில் சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பிறந்த குழந்தைகளை நோய் தாக்காமல் இருக்க தட்டமை தடுப்பூசி (பிசிஜி), போலியோ சொட்டு மருந்து ஆகியவை சுகாதாரத் துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வாரத்திலும் புதன்கிழமைகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும். துணை சுகாதார நிலையங்களில் பணியில் இருக்கும் சுகாதார செவிலியர்கள் முன்பு நேரடியாக களத்திற்கு சென்று குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டு வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளூரி்ல் தடுப்பூசி போட்ட ஒரு குழந்தை இறந்ததால் மக்கள் பீதியடைந்தனர். எனவே, அம்முறையை அரசு உடனடியாக தடை செய்தது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கிராம சுகாதார நிலையங்களில் டாக்டர் முன்னிலையில் தான் அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட வேண்டும் என அரசு புதியதொரு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இம்மாதம் முதல் பழைய முறையை மீண்டும் அறிமுகப்படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன் அடிப்படையில் துணை சுகாதார நிலையங்களிலுள்ள செவிலியர்கள் களப்பணியாக தங்கள் கிராமங்களுக்கு சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications