ஊழல் குறித்து சோனியா மவுனம் சாதிப்பது ஏன்? - அத்வானி

Subscribe to Oneindia Tamil

Advani
மும்பை: ஊழல் விவகாரத்தில் சோனியா காந்தி கடும் மௌனத்தைக் கடைப்பிடிப்பது ஏன்? என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கேள்வி எழுப்பினார்.

ஊழலுக்கு எதிரான தனது மக்கள் விழிப்புணர்வு யாத்திரையின் போது, அத்வானி மும்பை வந்திருந்தார். இங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ஏன் இவ்வளவுதூரம் மௌனமாக இருக்கிறார்? மன்மோகன் சிங் பிரதமராக இருக்கும்போது, அதுவும் இங்கிருக்கும் நிலையும் கம்யூனிஸ்டு நாடுகளைப் போல கட்சித் தலைமைக்குக் கட்டுப்பட்ட ஒரு அமைப்பாக இருக்கும்போது, தலைமை ஏன் அமைதியாக இருக்கிறது?

ஊழல் கட்டுக்குள் வந்தால்தான் பணவீக்கமும் கட்டுக்குள் வரும்.

வரும் குளிர்காலக் கூட்டுத்தொடர் நவம்பர் 11ம் தேதி தொடங்கும்போது, அதில் கறுப்புப் பண விவகாரம் முக்கிய இடத்தைப் பிடிக்கும்.

மக்கள் விழிப்புணர்வு யாத்திரைக்குப் பிறகு ஐ.மு.கூட்டணி அரசுக்கு எதிராக கறுப்புப் பண விவகாரத்தைக் கையிலெடுப்பேன். இந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் கறுப்புப் பண விவகாரத்தை முக்கியமான பிரச்னையாகக் கையில் எடுப்போம்.

வெளிநாட்டு வங்கிகளில் குவிந்து கிடக்கும் கறுப்பு பண விவகாரத்தில் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்புவோம். மேலும், வெளிநாட்டு வங்கிகளில் பணம் குவித்து வைத்திருப்பதாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய மூன்று பாராளுமன்ற வாதிகள் குறித்த விவகாரத்தை ஏன் வெளியிட மறுக்கிறார்கள். யார் அவர்கள்?

வெளி நாட்டு வங்கிகளில் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்கள் குறித்த வெள்ளை அறிக்கையினை மத்திய அரசு அளிக்க வேண்டும்," என்றார் அத்வானி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+