85000 ஸ்டேட் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

பாரத ஸ்டேட் வங்கியின் இணை வங்கிகளான, ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் உள்ளிட்டவற்றின் 20,000 அதிகாரிகளும் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகிகளுடன், நிர்வாக உயர் அதிகாரிகள் மும்பையில் வெள்ளிக்கிழமை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தமிழகத்தில் மட்டும் 5,000 பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் வேலைநிறுத்தம் செய்கின்றனர் என்றார் சங்கத்தின் துணை பொதுச் செயலர் தாமஸ் பிராங்கோ.
"வரும் திங்கள்கிழமை பக்ரீத் என்பதால் வங்கி விடுமுறை நாளாகும். அதிகாரிகளின் வேலைநிறுத்த நாள்களில் (நவ.8, 9) ஸ்டேட் வங்கியின் சேவைகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே, ஏடிஎம் மையங்களையும் இண்டர்நெட் மொபைல் வங்கி சேவைகளையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்று பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் பிரதீப் சௌத்ரி கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் இந்த வேலை நிறுத்தம் சட்டப்படி செல்லாது என்றும், பணிக்கு வராதவர்கள் மீது வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications