தூத்துக்குடியில் தொடர் மழையால் 75,000 பேர் பாதிப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பெய்து வரும் கனமழையால், 75,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளை துவக்கியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக மழை சற்று குறைந்துள்ளது. விவசாயத்திற்கு போதுமான அளவு மழை பெய்துள்ளதால் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட மாவட்டத்தின் வடக்கு, கிழக்கு, வடமேற்கு பகுதிகளில் விவசாயிகள் முக்கிய விவசாய பணிகளை துவங்கியுள்ளனர்.
ஏரி, குளங்கள், கண்மாய்கள் சுமார் 40 சதவீதம் வரை நிறைந்துள்ளன. இந்நிலையில் தொடர்ந்து மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை காரணமாக மாவட்டத்தின் முக்கிய தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 75,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
தொடர்ந்து, வீடுகள், குடிசைகள், குடியிருப்புகள் இடிந்துள்ளன. மாவட்டத்தில் இதுவரை 101 வீடுகள் பகுதியளவிலும், முழுமையாகவும் இடிந்துள்ளன. இதனை கணக்கெடுத்து நிவாரணம் வழங்குவதற்கு வருவாய் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications