கூடங்குளம்: போராட்டக்குழுவில் இருந்து பாதிரியார் விலகல்: உடைகிறது போராட்டக்குழு
நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராகப் போராடி வரும் குழுவில் இருந்து தூத்துக்குடி மாவட்ட ஆயர் இவான் அம்ப்ரோஸ் விலகியுள்ளார் என்று கூறப்படுகிறது.
கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த மக்கள் அச்சத்தைப் போக்க மத்திய அரசு நியமித்த 15 பேர் கொண்ட நிபுணர் குழு நேற்று தமிழக அரசி்ன் 6 பேர் கொண்ட குழுவை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தியது. அந்த ஆலோசனைக் கூட்டதிற்கு மாநில அரசின் குழுவில் இடம்பெற்றிருந்த போராட்டக்குழுவைச் சேர்ந்த தூத்துக்குடி மாவட்ட ஆயர் இவான் அம்ப்ரோஸ் வரவில்லை.
மாறாக அவர் தனது உதவியாளர் பாதிரியார் சத்தியநேசன் மூலம் நெல்லை மாவட்ட ஆட்சியர் செல்வராஜுக்கு கடிதம் அனுப்பினார். இதனால் போராட்டக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர் மாநில அரசின் குழுவில் இருந்தும், போராட்டக்குழுவில் இருந்தும் விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,
அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் நான் பங்கேற்கவில்லை. எனக்கு அதில் நாட்டம் இல்லை. மதபோதகர் பணியில் இருக்கும் நான், அணுசக்தி துறையில் தொடர்புடைய நிபுணர் அல்ல. எனவே, இந்த விஷயத்தில் என் ஒப்புதலின்றி, என் பெயர், தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அணு உலை தொடர்பான தமிழக அரசின் கமிட்டியில் நான் இடம் பெற மாட்டேன். இப்பிரச்னை தொடர்பான கமிட்டி கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்க மாட்டேன் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்தன.
ஆனால் அவர் மாதாந்திர பிரார்த்தனை கூட்டத்திற்கு சென்றதால் தான் ஆலோசனை கூட்டத்திற்கு வரமுடியாமல் போனது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் கூடங்குளத்தில் இருந்து தொலைவில் உள்ள சேரன்மகாதேவி பாதிரியாக ஜேசுராஜன் என்பவர் போராட்டக்குழுவுக்கு ஆதரவு தெரிவித்து, அணு உலைக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார்.
முதல் கட்ட ஆலோசனை கூட்டம் நேற்று முடிந்த நிலையில் இன்னும் 10 நாட்களில் மீண்டும் ஆலோசனை கூட்டம் நடக்கவிருக்கிறது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications