அடுத்த முறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால் அரசுக்கு ஆதரவு வாபஸ்: மமதா பல்டி!
கொல்கத்தா: பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து, ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் பெறப் போகிறேன், இதையெல்லாம் ஏற்கவே முடியாது, பொறுக்க முடியாது என்று படு வேகமாக பேசி வந்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, தற்போது அப்படியே ஜகா வாங்கி விட்டார். அடுத்த முறை உயர்த்தினால் நிச்சயம் ஆதரவு வாபஸ் என்று கூறி தனது எதிர்ப்பை அப்படியே காலில் போட்டு மிதித்து விட்டார்.
மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் முக்கியக் கட்சிகளில் ஒன்று மமதாவின் திரினமூல் காங்கிரஸ். திரினமூல் காங்கிரஸுக்கு திமுகவை விட அதிகம் இருப்பதால்தான் காங்கிரஸ் கட்சி திமுகவைக் கூட கண்டு கொள்ளாமல் ஓரம்கட்டி வைத்துள்ளது. திரினமூலை மட்டும் தாஜா செய்து வந்தால் போதும், ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சி வண்டியை, ஸ்மூத்தாக ஓட்டிக் கொள்ளலாம் என்ற நினைப்பு காங்கிரஸுக்கு.
இதை நன்கு உணர்ந்துள்ள மமதாவும் அவ்வப்போது ஏதாவது ஒரு பிரச்சினையைக் காரணமாக வைத்து காங்கிரஸையும், மத்திய அரசையும் மிரட்டி தனக்கும், தனது கட்சிக்கும், தனது மாநிலத்திற்கும் தேவையானதை சாதித்துக் கொள்கிறார். பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும்போதெல்லாம் முதல் ஆளாக படு வேகமாக குரல் கொடுப்பார் மமதா. ஆனால் அதே வேகத்தி்ல தனது எதிர்ப்பைக் கைவிட்டு விடுவார்.
அதே போலத்தான் தற்போது பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதை எதிர்த்தும் படு ஆவேசமாக குரல் கொடுத்தார். இந்த முறை சற்று ஓவராகவே குரல் கொடுத்தார். ஆட்சிக்கு ஆதரவு வாபஸ் என்று அவர் போட்ட போட்டால் உண்மையிலேயே பயந்து போனது காங்கிரஸ்.
இதையடுத்து திரினமூல் காங்கிரஸ் குழுவை சந்திக்க பிரதமர் விருப்பப்பட்டார். அதன்படி நேற்று அக்கட்சியின் எம்.பிக்கள் குழு பிரதமரை சந்தித்துப் பேசியது. அப்போது தங்களது மாநிலத்திற்குத் தேவையானவை குறித்த ஒரு பட்டியலை திரினமூல் காங்கிரஸ் கொடுத்ததாக தெரிகிறது. பின்னர் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து அவர்கள் திரும்பிச் சென்றனர்.
இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மமதா பானர்ஜி கூறுகையில், எங்களது கட்சி எம்.பிக்கள் பிரதமரை சந்தித்துப் பேசினர். பெட்ரோல் விலை உயர்வால் எவ்வளவு பிரச்சினைகள் வரும் என்பதை அவரிடம் விளக்கினர்.
அடுத்து காஸ், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை உயர்த்தும் திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எங்களது எம்.பிக்கள் பிரதமரிடம் கேட்டனர். அப்படியா, அப்படி எதுவும் இருப்பதாக தெரியவில்லையே என்று பிரதமர் கூறியதாக தெரிகிறது. ஆனால் விலை உயர்வு இருக்காது என்று அவர் கூறவில்லை.
எனவே இந்த நிமிடம் முதல் நாங்கள் அரசை கூர்ந்து கவனிக்கப் போகிறோம். அதன் போக்கைக் கண்காணிக்கப் போகிறோம். மறுபடியும் எதையாவது விலை உயர்த்தினால் நிச்சயம் அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்று விடுவோம். அதில் சந்தேகமே இல்லை. அவசரப்பட்டு எந்த முடிவையும் நாங்கள் இப்போது எடுக்க விரும்பவில்லை. ஆனால் அடுத்த முறை விலை உயர்வு இருந்தால் நாங்கள் அரசுடன் இருக்க மாட்டோம் என்றார் மமதா. இதன் மூலம் தனது எதிர்ப்பை தற்போது கைவிட்டு விட்டார் மமதா.
மக்கள் இப்போது கஷ்டப்படட்டும், அடுத்த முறை கஷ்டப்பட்டால் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து விட்டாரா மமதா...?
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications