வெறும் பேச்சால் ஊழலை ஒழிக்கமுடியாது- அன்னா குழு மீது சோனியா பாய்ச்சல்
ரிஷிகேஷ்: அன்னா ஹஸாரே குழுவினரின் போராட்டங்கள் குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார் - அதுவும் காட்டமாக. வெறும் பேச்சால் ஊழலை ஒழிக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அன்னா ஹஸாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் நாட்டையே உலுக்கியெடுத்த நேரத்தில் சோனியா காந்தி எதுவும் பேசவில்லை. மேலும் அவருக்கு உடல் நலமும் சரியில்லை. அமெரிக்காவில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் உடல் நலம் சரியான பின்னர் முதல் முறையாக அவர் கருத்து தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் நடந்த நிகழ்ச்சியில் சோனியா பங்கேற்பதாக இருந்தது. இருப்பினும் காய்ச்சல் காரணமாக அவர் வரவில்லை. மாறாக தனது பேச்சை எழுத்துப்பூர்வமாக அவர் அனுப்பியிருந்தார்.
சோனியா காந்தியின் பேச்சை காங்கிரஸ் தலைவர் சத்பால் மகராஜ் வாசித்தார்.
அதில் சோனியா கூறியிருப்பதாவது:
லோக்பால் மசோதா கொண்டுவரப்படும் என்று பிரதமரே உறுதியளித்து விட்டார். அதற்குப் பின்னரும் ஏன் அமளி துமளியை எழுப்புகிறார்கள் என்று புரியவில்லை.
வெறும் பேச்சுக்களால் ஊழலை ஒழிக்க முடியாது.தகவல் அறியும் உரிமை சட்டம் நடைமுறைக்கு வர நான்தான் பாடுபட்டேன், தொடக்க நடவடிக்கைகளை எடுத்தேன் என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
அரசு ஒரு உத்தரவாதத்தை அளித்துள்ளது. அதைக் கடைப்பிடிக்க கடுமையாக முயன்று வருகிறது. பிறகு ஏன் சத்தம் எழுப்புகிறார்கள்? என்று தனது உரையில் கூறியிருந்தார் சோனியா.
ராசா ஏன் சிறையில் இருக்கிறார்?-சோனியாவிடம் விளக்கம் கேட்கும் பாஜக
சோனியா காந்தியின் பேச்சு குறித்து பாஜக கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சித் தலைவர்கள் கூறுகையில், சோனியா காந்தி பேசுவது இருக்கட்டும். அவரது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஊழலை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை அவர் விளக்க வேண்டும்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து அவர் விளக்க வேண்டும். ராசா ஏன் சிறையில் இருக்கிறார் என்பதை விளக்க வேண்டும். ப.சிதம்பரத்தை இதுவரை ஏன் விசாரணைக்கு உட்படுத்தாமல் காப்பாற்றி வருகிறார்கள் என்பதை அவர் விளக்க வேண்டும் என்று பாஜக கேட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications