முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் அலுவலகத்தில் வணிகவரித் துறை ரெய்டு
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனுக்கு சொந்தமான ஸ்டீல் நிறுவன அலுவலகத்தில் நேற்று வணிகவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
திமுக ஆட்சியில் சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்தவர் சுரேஷ் ராஜன். நெல்லை மாவட்டம், அஞ்சுகிராமத்தில் அவருக்கு சொந்தமாக என்.எஸ்.ஆர் ஸ்டீல் என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் அலுவலகம் நாகர்கோவிலில் உள்ளது.
நேற்று அந்த அலுவலகத்தில் வணிகவரித்துறை அதிகாரிகள் திடீர் என்று அதிரடி சோதனை நடத்தினர். கடந்த அக்டோபர் மாதம் தான் சுரேஷ் ராஜன் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுரேஷ் ராஜன் மீது அவதூறு வழக்கு, நில அபகரிப்பு வழக்கு, நில மோசடி வழக்கு ஆகிய வழக்குகள் உள்ள நிலையில் இந்த திடீர் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications