சோனியா தொகுதியில் ஜன்லோக்பாலுக்கு 99.5% பேர் ஆதரவு: அன்னா குழு அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் முடிவதற்குள் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவோற்றா விட்டால் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் அன்னா குழுவினர் தங்கள் மசோதாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தொகுதியான ரே பரேலியில் எவ்வளவு ஆதரவு உள்ளது என்பதை தெரிந்துகொள்ள விரும்பினர்.
அவர்களுக்கே ஆச்சரியம் அளிக்கும் வகையில் 99.5 சதவீதம் பேர் ஜன் லோக்பால் மசோதாவுக்கு ஆதரவாக உள்ளனர்.
இது குறித்து அன்னா குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது,
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் முடிவதற்குள் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் வரும் தேர்தலில் நாங்கள் சோனியா காந்தியை ஆதரிக்க மாட்டோம் என்று ரே பரேலி மக்கள் தெரிவித்தனர் என்றார்.












Click it and Unblock the Notifications