உ.பியை 4 மாநிலங்களாக பிரிக்க 'ராஜதந்திரி' மாயாவதி திட்டம்
லக்னோ: 75 மாவட்டங்களுடன் பரந்து விரிந்திருக்கும் உத்தரப் பிரதேச மாநிலத்தை 4 மாநிங்களாக பிரிக்க அம்மாநில முதல்வர் மாயாவதி திட்டமிட்டுள்ளார். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலை மனதில் வைத்து தான் இந்த திட்டத்தை தீட்டியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வருமான மாயாவதி 2012ம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலுக்குத் தயாராகி வருகிறார். இந்த ஆட்சியில் மாயாவதியின் பெயர் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி கெட்டுவிட்டது. இந் நிலையில் உத்தரப் பிரதேசத்தில் அவ்வப்போது சர்பிரைஸ் விசிட் கொடுத்து விவசாயிகளை ஆச்சரியப்படுத்தி விவசாயிகள் தோழன் என்று பெயர் வாங்கியுள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி.
இவர் ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் பாஜக, சமாஜ்வாடி கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்க முனைப்பாக உள்ளன. ஏற்கனவே பிரச்சனைகள் இருக்கையில் இந்த போட்டிக் கட்சிகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று மாயாவதி யோசித்தார். உடனே ஆங்கிலேயர்களின் திட்டமான பிரித்து ஆளுதல் அவர் நினைவுக்கு வந்ததது போலும்.
75 மாவட்டங்கள் உள்ள பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தை 4 மாநிலங்களாக்கத் திட்டமிட்டுள்ளார். பூர்வாஞ்சல் (32 மாவட்டங்கள்), ஹரித் பிரதேஷ் (22 மாவட்டங்கள்), மத்திய உபி (14 மாவட்டங்கள்), பண்டல்கண்ட் (7 மாவட்டங்கள்) என 4 மாநிலங்களாகப் பிரிக்க திட்டமிட்டுள்ளார்.
இதற்கான மசோதாவை வரும் 21ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்கிறார்.
மாநிலம் உண்மையிலேயே பிரிக்கப்படுகிறதோ இல்லையோ தனது இந்த அறிவிப்பின் மூலம் மாயாவதி தலித் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளை எளிதில் பெற்று மீண்டும் உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்துவிடுவார் என்கிறது ஓர் ஆய்வு.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications