இலங்கை காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கும் கனடா முடிவுக்கு நாம் தமிழர் வரவேற்பு
சன்னிவேல், கலிபோர்னியா: இனவெறி இலங்கையில் 2013ம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் அறிவித்துள்ளதற்கு அமெரிக்க நாம் தமிழர் அமைப்பு வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி:
கடந்த ஞாயிறன்று நடந்த காமன்வெல்த் மாநாட்டின்போது, 2013ம் ஆண்டு காமன்வெல்த் மாநாட்டை நடத்தவுள்ள இலங்கையின் அதிபர் ராஜபக்சேவை பேச அழைத்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் வெளிநடப்பு செய்தது மிகவும் துணிகரமான, பாராட்டுக்குரிய செயலாகும்.
இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து அக்கறையும் கவலையும் கொண்டுள்ள மேற்கத்திய தலைவர்களுக்கு இது ஊக்கம் தரும் செயலாக அமைந்துள்ளது. உலகத் தலைவர்கள், மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்து வரும் இலங்கையை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கு சரியான முன்னுதாரணமாக கனடா பிரதமரின் நடவடிக்கை அமைந்துள்ளது.
2013 காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கும் முடிவு குறித்து ஹார்ப்பரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இலங்கை மீதானகடுமையான மனித உரிமை மீறல்கள்,போர்க்குற்றச்சாட்டுக்கள், தமிழர் மீள்குடியேற்றம் உள்ளிட்டவை குறித்து தான் ராஜபக்சேவுடன் பேசியதாக குறிப்பிட்டார். இதுதொடர்பாக இலங்கை அரசு மிகவும் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜபக்சேவை தான் வலியுறுத்தியதாகவும் கூறினார் ஹார்ப்பர். மேலும் நாகரீகமடைந்த உலகிந் எதிர்பார்ப்புகளை ராஜபக்சே அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கண்டிப்புடன் கூறியதாகவும் தெரிவித்தார் ஹார்ப்பர்.
மேலும், இந்தப் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசு ஆக்கப்பூர்வமான தீர்வு காணாவிட்டால்,2013 காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என்ற தனது முடிவை மறு பரிசீலனை செய்யப் போவதில்லை என்றும் ஹார்ப்பர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
கனடாப் பிரதமரின் இந்த உறுதியான முடிவை திறந்த மனதுடனும், மகிழ்ச்சியுடனும் நாம் தமிழர் அமெரிக்கா வரவேற்கிறது. இதேபோன்ற நடவடிக்கையை உலகத் தலைவர்களிடமிருந்தும் நாம் தமிழர் அமெரிக்கா எதிர்பார்க்கிரது.
மேலும் இதைப் பயன்படுத்திக் கொண்டு, ஹார்ப்பரும், பிற உலகத் தலைவர்களும் இலங்கைக்கும், ராஜபக்சே அரசுக்கும் கடும் நெருக்குதல்களைக் கொடுக்க வேண்டும். இலங்கை மீது பொருளாதாரத் தடை உள்ளிட்டவற்றை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் மரியாதையுடனும், கெளரவத்துடனும், அமைதியுடனும் வாழ வழி கிடைக்கும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
நாம் தமிழர் அமெரிக்கா, கலிபோர்னியாவைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்ட பொது நலன் அமைப்பாகும். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நலனுக்காக இந்த அமைப்பு பாடுபட்டு வருவதாக அதன் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு www.us.naamtamilar.org
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications