கடும் நிதி நெருக்கடியில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்.. 130 பைலட்டுகள் விலகல்!

அதே போல ஏர்பஸ் ஏ-320 விமானங்களில் இதற்கான மறுகட்டமைப்பு செய்யும் பணி காரணமாக் தான், விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கிங்பிஷர் கூறியதும் தவறான தகவல் என்று தெரிய வந்துள்ளது. உண்மையான காரணம், கடந்த சில வாரங்களில் 130 பைலட்டுகள் ராஜினாமா செய்துவிட்டுப் போயுள்ளதே.
நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறிக் கொண்டு பைலட்டுகள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் தராததோடு, விமானங்களை லீசுக்கு விட்ட நிறுவனங்களுக்கு பணமும் செலுத்தவில்லை கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையா. இதையடுத்து இந்த நிறுவனங்கள் விமானங்களை திரும்ப ஒப்படைக்குமாறு மல்லையாவை நெருக்க ஆரம்பித்துள்ளன.
மேலும் பெட்ரோலிய நிறுவனங்களுக்கும் விமான எரிபொருளுக்கான கட்டண பாக்கியும் நிலுவையில் உள்ளது. இதனால் அவர்கள் எரிபொருள் தர மறுத்து வருகின்றனர்.
ஊதியம் வழங்கப்படாததால், பைலட்டுகள் ஏராளமானோர் ராஜினாமா செய்துவிட, மற்றவர்கள் உடம்பு சரியில்லை என்று கூறிவிட்டு லீவில் போய்விட்டனர்.
இந்தக் காரணங்களால், தான் 36 சதவீத விமான சேவைகளை கிங்பிஷர் ரத்து செய்துள்ளது. விமானங்களை ரத்து செய்ய செய்ய, நஷ்டமும் குறையும் என்பதால், முடிந்தவரை விமான சேவைகளை கிங்பிஷர் ரத்து செய்து வருகிறது.
இந்த நிதித் தட்டுப்பாட்டிலிருந்து மீள சில வங்கிகளின் உதவியை மல்லையா நாடியுள்ளதாகத் தெரிகிறது. இதற்கு அடமானமாக தான் கட்டி வரும் மாபெரும் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளை வங்கிகளிடம் ஒப்படைக்கவும் அவர் முன் வந்துள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே விரைவிலேயே கிங்பிஷர் நிறுவனம் திவால் ஆனதாக அறிவித்துவிட்டு மூடப்படும் என்றும் செய்திகள் பரவியுள்ளன. இதை, கிங்பிஷர் நிறுவனம் மறுத்துள்ளது. கிங்பிஷர் ஏர்லைன்சுக்கு வேண்டிய உதவிகளை மல்லையாவின் யுபி குரூப் தொடர்ந்து வழங்கி வருவதாக அதன் செயல் அதிகாரி சஞ்சய் அகர்வால்.
இந்த குழப்பங்களையடுத்து கிங்பிஷர் பங்குகளின் விலை 18 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளன.
இந் நிலையில் கிங்பிஷருக்கு மத்திய அரசு உதவி செய்யும் என்று தகவல்கள் வருகின்றன. இந்த நிறுவனத்துக்கு வங்கிகளிடமிருந்து கடன் பெற்றுத் தர விமானத்துறை அமைச்சர் வயலார் ரவி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் பேசி வருவதாகத் தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications