உலகத் தமிழர்களை ஒருங்கிணைத்து விடுவேன் என அஞ்சுகிறது மத்திய அரசு-சீமான்
வேலூர்: உலகத்தமிழர்களை ஒருங்கிணைத்து விடுவேன் என்ற அச்சத்தினால்தான் அமெரிக்கா, கனடா செல்வதற்கு மத்திய அரசு மூலம் தமக்கு அனுமதி மறுக்கப்படுவதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறியுள்ளார்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தூக்கு தண்டனைக்கு 8 வார கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வேலூர் சிறையில் இருக்கும் மூவரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தூக்கு தண்டனையே கூடாது என்று தமிழர்கள் மட்டுமல்ல, பல்வேறு அமைப் பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதம் ஆகியவை நடத்தி எங்கள் உணர்வை வெளிபடுத்தி வருகிறோம்.
சிறையில் உள்ள 3பேரின் தூக்கு தண்டனை வழக்கு வருகிற 29-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. அவர்கள் 3 பேரும் சட்டரீதியாக விடுதலையாவார்கள். தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.
முதலமைச்சர் மீது நம்பிக்கை
தமிழக அமைச்சரவையை முதலமைச்சர் ஜெயலலிதா கூட்டி தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. நான் 2008-ல் இருந்து 10 ஆண்டுகள் அமெரிக்கா, கனடா செல்ல விசா எடுத்து உள்ளேன். தற்போது சர்வதேச அளவில் தமிழர்களை நான் ஒருங்கிணைந்திடுவேன் என்ற அச்சம் காரணமாக எனக்கு அமெரிக்கா, கனடாவுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று சீமான் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications