கன்னியாகுமரி பூம்புகார் படகுத்துறை அருகே ரூ.18.5 லட்சம் செலவில் சுனாமி முன்னெச்சரிக்கை மையம்

கடந்த 2004ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், கன்னியாகுமரி, பிள்ளைதோப்பு, கொட்டில்பாடு, கீழமணக்குடி உள்ளிட்ட பகுதி மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.
இதையடுத்து மத்திய அரசின் கடல்சார் வாரியம் சார்பில் கன்னியாகுமரி, நாகப்பட்டினம், கடலூர், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கன்னியாகுமரி பூம்புகார் படகுத் துறை அருகே சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மத்திய அரசின் கடல்சார் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது,
மத்திய அரசின் கடல்சார் வாரியம் சார்பில் கன்னியாகுமரி, நாகப்பட்டினம், கடலூர், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக கன்னியாகுமரி படகுத் துறையை ஒட்டி உள்ள கடல் பகுதியில் 10 மீட்டர் ஆழத்துக்கு கான்கிரீட் பிளாக்குகள் போடப்பட்டன. இதுவரை 2 டன் எடையுள்ள பிளாக்குகள் கடலுக்குள் போடப்பட்டுள்ளன. இந்த பிளாக்குகள் இணைக்கப்பட்டு அதன் மேல் சுனாமி எச்சரிக்கை மையத்துக்கான கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்ததும் நவீன கருவிகள் பொருத்தப்படும்.
இதையடுத்து கடல் அலையின் உயர் மட்டம், கடல் நீர் மட்டம் குறைதல், அலையின் வேகம், நீரின் தன்மை, சுனாமிக்கான அறிகுறிகள் ஆகிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம். நவீன கருவிகள் பொருத்தப்பட்டதும் இம்மையம் முழுவீச்சில் செயல்படத் தொடங்கும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications