பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு: உத்தப்புரம் கோவிலில் தலித் மக்களுக்கு அனுமதி
மதுரை: உத்தபுரம் முத்தாலம்மன் கோவிலில் தலித் மக்கள் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர்.
மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகாவில் உள்ளது உத்தபுரம். இங்கு தலித் மக்களையும் மற்றொரு சமூகத்தினரையும் பிரிக்கும் வகையில் தீண்டாமைச் சுவர் கட்டப்பட்டிருந்தது. இந்த தீண்டாமைச் சுவரை அகற்றவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தது.
இதனையடுத்து கடந்த 2008ம் ஆண்டு திமுக அரசு தீண்டாமைச் சுவரின் ஒரு பகுதியை இடித்து பொதுப்பாதை ஏற்படுத்திக் கொடுத்தது.
இது தவிர அரசமர வழிபாட்டு உரிமை, கோவில் வழிபாட்டு உரிமை, நிழற்குடை கட்டுவது, தலித் மக்கள் வாழும் பகுதிக்குள் செல்லும் சாக்கடையை திருப்பி விடுவது போன்ற பிரச்சனைகளும் தொடர்ந்து இருந்து வந்தன.
உத்தபுரத்தில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்களால் முத்தாலம்மன், அரசமர வளாகம் காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. கோவிலும் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் முன்னிலையில் தலித் மக்களும் மற்றொரு சமூகத்தினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் உத்தபுரம் காவல் நிலையம் உள்ள இடத்தில் நிழற்குடை கட்டுவது, முத்தாலம்மன் கோவிலுக்குள் இருதரப்பு மக்களும் சென்று சாமி தரிசனம் செய்வது, இரு தரப்பிலும் உள்ள வழக்குகளை வாபஸ் பெறுவது என உடன்பாடு ஏற்பட்டது.
இந்த நிலையில் உத்தபுரம் முத்தாலம்மன் கோவிலுக்கு தலித் மக்களும், மற்றொரு சமூகத்தினரும் ஒற்றுமையுடன் சென்று வழிபாடு செய்தனர்.
பூஜைப் பொருட்களுடன் தலித் மக்கள் கோவிலுக்கு சென்றபோது அவர்களை மற்றொரு சமூகத்தினர் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.
பின்பு கோவில் பூசாரி முத்தாலம்மனுக்கு பூஜைகள் செய்தார். தொடர்ந்து அவர்கள் சாமி கும்பிட்டுவிட்டு மகிழ்ச்சியுடன் சென்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications